SIR-க்கு எதிரான தவெகவின் போராட்டம்.. தடை உத்தரவை மீறியதாக 2 மாவட்டச் செயலாளர்கள் மீது வழக்குப் பதிவு! TVK District Secretaries Booked by Police Following Protest Against Voters List Revision (SIR)

SIR-க்கு எதிரான தவெகவின் போராட்டம்.. தடை உத்தரவை மீறியதாக 2 மாவட்டச் செயலாளர்கள் மீது வழக்குப் பதிவு! TVK District Secretaries Booked by Police Following Protest Against Voters List Revision (SIR)

திருவல்லிக்கேணி போலீஸ் அதிரடி: புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்கு

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தைக் (எஸ்ஐஆர்) கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்றது.

 சென்னையில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்கினார். அவருடன் அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பிரிவுப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மாவட்டச் செயலாளர்கள் அப்புனு, பாலமுருகன், குமார், சரவணன், தாமு, திலீப் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, திருவல்லிக்கேணி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். தவெகவைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் அப்புனு, திலீப் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சட்ட செயல்முறையைச் செயல்படுத்துவது எதிர்ப்பது மற்றும் பொது ஊழியரால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks