Bihar Election 2025: 'நல்லாட்சி வென்றது... வளர்ச்சி வென்றது' - பிரதமர் மோடி நெகிழ்ச்சி! PM Modi Declares 'Good Governance, Development Won' After NDA Victory

NDA-வின் மாபெரும் வெற்றி: பீகார் மக்களுக்கு நெகிழ்ச்சிப் பதிவுடன் நன்றி தெரிவித்தார் பிரதமர்!

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-இன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 200க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் வெற்றியை நோக்கி முன்னிலை வகித்துவருவதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். சமூக வலைதளம் மூலம் பீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்த வெற்றி பீகாரை மேலும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் என்று உறுதி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள உணர்ச்சிமிகு பதிவில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கிய நல்லாட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது; மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. மக்களாட்சி வென்றுள்ளது, சமூக நீதி வென்றுள்ளது. 2025 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெற்றியை வழங்கியுள்ளனர். இந்த வெற்றி எங்களை மேலும் உறுதியுடன் மக்கள் பணியாற்ற வைக்கும். பீகார் மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என்று சிலாகித்துக் குறிப்பிட்டுள்ளார்.

NDA அரசு செயல்படுத்திய வளர்ச்சிப் பணிகளையும் மற்றும் எதிர்காலத் திட்டங்களையும் மக்கள் ஆதரித்ததன் விளைவாகவே இந்த வெற்றி சாத்தியமானது என பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களான முதல்வர் நிதிஷ் குமார், சிரக் பாஸ்வான், ஜிதன் ராம் மாஞ்சி, உபேந்திர குஷ்வாஹா என அனைவருக்கும் அவர் வாழ்த்துகள் தெரிவித்தார். இந்த மகத்தான வெற்றி, முன்னெப்போதும் இல்லாத வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியை மக்கள் நம்புவதை தெளிவாகக் காட்டுகிறது என்றும் பிரதமர் தனது பிரகடனத்தில் வலியுறுத்தினார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk