கார்த்திகை சோமவாரப் பிரதோஷத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் எழுந்தருளியிருக்கும் மஹாநந்தியம் பெருமானுக்கு, கார்த்திகை சோமவாரப் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று அதிவிமர்சையாகச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இந்த புனித நிகழ்வில், பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட திரவியப் பொடி, அரிசி மாவுப் பொடி, மஞ்சள், தேன், பால், தயிர், பழ வகைகள், கரும்புச் சாறு, சந்தனம் உள்ளிட்ட பலவகையான அபிஷேகப் பொருட்களால் மஹாநந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அபிஷேகத்தைத் தொடர்ந்து, மஹாநந்திப் பெருமான் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கண்கொள்ளாக் காட்சியாகக் காட்சியளித்தார். பிறகு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த பக்திப் பரவசமூட்டும் புனிதக் காட்சியைக் காண்பதற்காக, நந்தி மண்டபம் முன்பு ஏராளமான பக்தர்கள் திரண்டு அமர்ந்து, நந்தியம் பெருமானை மனமுருக வழிபட்டனர்.
