தங்கம் விலை நிலைகுலைந்தது.. ஒரே நாளில் சவரனுக்கு ₹1,280 பெரும் சரிவு; நகை வாங்குவோருக்குச் சாதகமான சந்தை நிலவரம்!
தங்கம் விலை சந்தையில் இன்று பெரும் சரிவைச் சந்தித்து, நகை வாங்குவோருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை முதலே சலசலப்புடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, ஒரே நாளில் சவரனுக்கு ₹1,280 என்ற அதிர்ச்சிக்குரிய அளவில் குறைந்துள்ளது.
காலையில் ₹480 குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் அதிரடியாக ₹800 குறைந்ததால், ஆபரணத் தங்கத்தின் ஒரு சவரன் விலை தற்போது ₹93,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த திடீர் விலை வீழ்ச்சி, முதலீட்டாளர்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் ஆரம்ப கட்டத்தில் ஒரு நிலைகுலைவை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்களே இந்த சரிவுக்குக் காரணம் என்று சந்தை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக ஏறுமுகத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது கணிசமாகப் குறைந்திருப்பது, அடுத்த சில நாட்களில் அதன் சந்தை மதிப்பீட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
.png)