பெண்களின் வரலாறு காணாத ஆதரவு பா.ஜ.க. கூட்டணிக்குக் கிடைத்ததா? தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் கடும் சரிவு!
பீகாரில் 243 சட்டமன்ற இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை தொடங்கியது. இரண்டு கட்டத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தொடர்ந்து அசுர பலத்துடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தத் தேர்தலில் பெண்கள் அதிக அளவில் வாக்களித்ததே NDA-வின் இந்த முன்னிலைக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் (பிற்பகல் 2:30 மணி நிலவரம்):
| கூட்டணி/கட்சி | முன்னிலை/வெற்றி பெற்ற இடங்கள் |
| NDA கூட்டணி | 202 |
| INDIA கூட்டணி | 34 |
| ஜன சுராஜ் கட்சி (JSP) | 00 |
| மற்றவை (OTH) | 07 |
கூட்டணியில் உள்ள பாஜக - ஐக்கிய ஜனதா தளம் (JDU) கூட்டணி 136 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது. பெண்களின் வாக்குகள் முக்கியத்துவம்:பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் இந்த முறை பெண் வாக்காளர்களின் பங்களிப்பு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் சாதனைப் பதிவு:
மொத்த வாக்குப்பதிவு 66.91% ஆக இருந்த நிலையில், பெண்களின் வாக்குப்பதிவு 71.6% ஆக உயர்ந்தது. இது ஆண்களை விட (62.8%) 8.8% சதவீதம் அதிகம்.பீகார் தேர்தல் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய வித்தியாசமாகும். வாக்களித்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் பெண்கள் ஆண்களை மிஞ்சியிருப்பது இதுவே முதல் முறையாகும். பெண்கள் அதிக அளவில் NDA கூட்டணிக்கு வாக்களித்துள்ளதே இந்தக் கூட்டணி முன்னிலை வகிக்க முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
INDIA கூட்டணி மற்றும் லாலுவின் மகன் பின்னடைவு.. காங்கிரஸ் பலவீனம்:
61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து, பலவீனமான செயல்பாட்டைக் காட்டுகிறது. RJD முன்னிலை: கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. INDIA கூட்டணி மொத்தம் 70 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தேஜஸ்வி யாதவ்:
இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், RJD தலைவர் லாலு யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ், தனது ரகோபூர் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ் குமார், தேஜஸ்வி யாதவை விட 2,288 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
பிரசாந்த் கிஷோருக்குப் பின்னடைவு:
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன சுராஜ் கட்சி (JSP), பெரும்பாலான தொகுதிகளில் கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது.ஒரே ஒரு இடம்: ஜன சுராஜ் கட்சி தற்போது ஒரே ஒரு இடத்தில் (கர்கஹர் தொகுதியில் ரித்தேஷ் ரஞ்சன்) மட்டுமே முன்னிலை வகிக்கிறது. பிரசாந்த் கிஷோர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் வல்லுநர்கள் கருத்து:
ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாமல் போகும் நிலை JSP-க்கு ஏற்படலாம். இது, அரசியல் வல்லுநர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) இது ஒரு பெரிய பாடமாக அமையும் என்றும், அரசியலில் புதிதாகக் களமிறங்கும் கட்சிகளுக்கு இது ஒரு தெளிவான செய்தியை வழங்கியுள்ளதாகவும் கருதப்படுகிறது.NDA கூட்டணி விரைவில் வெற்றிபெற்று பீகாரில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
