மழலைச் செல்வங்களின் உரிமைகளை காத்திட வேண்டும் என தவெக தலைவர் விஜய் பிரகடனம்!
இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் அவர்கள் தனது சமூக வலைதளம் மூலம் உணர்ச்சிமிகு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். குழந்தைகள், 'வண்ணத்துப் பூச்சிகளாய்ப் பறப்பவர்கள் என்றும், அவர்களின் 'வெள்ளைச் சிரிப்பினில் நம் உள்ளம் நெகிழ வைப்பவர்கள்' என்றும் அவர் சிலாகித்துப் பேசியுள்ளார். மேலும், மழலைச் சிரிப்பினால்தான் மனக்காயங்கள் ஆறும் என்றும், அவர்கள் 'விலை மதிப்பில்லாத நம் செல்வம்' என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் விஜய் பதிவு செய்துள்ளார்.
ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில், குழந்தைகளின் உரிமைகளை என்றும் காத்திட வேண்டும் என்றும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
'கள்ளம் கபடமற்ற நம் மழலைச் செல்வங்களின் கனவுகள் யாவும் நனவாக, எல்லையில்லாக் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்க' என்றும், அவர்களின் 'வண்ணப் புன்னகை என்றும் தொடர' என்றும் அவர் தனது உண்மையான வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த வாழ்த்துச் செய்தி, அரசியல் களம் தாண்டி பல தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
