வாக்காளர் பட்டியல் பணி அழுத்தம்: கேரள ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை - விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையர்! Kerala Election Duty Death: Govt Employee Anish George Commits Suicide Due to Work Pressure

அதிகாரிகளின் 'அழுத்தம்' காரணமாக 200 படிவங்களை வழங்க முடியாமல் உயிரை மாய்த்துக்கொண்டதாகப் புகார்!

சென்னை, நவம்பர் 17, 2025: வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியின்போது, அதிகாரிகளின் அதீத பணி அழுத்தத்தைத் தாங்க முடியாமல், கேரளாவின் பையன்னூரில் அரசுப் பள்ளி ஊழியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கோரியுள்ளார்.


கேரளா, கண்ணூர் மாவட்டம், பையன்னூர் அரசுப் பள்ளியில் ஊழியராகப் பணிபுரிந்தவர் அனீஸ் ஜார்ஜ் (41). வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி தொடங்கிய நிலையில், இவர் வாக்குச்சாவடி நிலை அலுவலராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் அனைத்து வாக்காளர்களிடமும் கணக்கீட்டுப் படிவங்களை வழங்க வேண்டும் என அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் ஓய்வின்றி இரவு பகலாகப் பணியாற்றினாலும், அவரால் 200 படிவங்களை வழங்க முடியவில்லை எனத் தெரிகிறது.

இதனால் மனமுடைந்த அனீஸ் ஜார்ஜ் தனது வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீஸார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலை மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகன் நள்ளிரவு 2 மணி வரை பணி அழுத்தத்தினால் பணியாற்றியதாகவும், அதனைத் தாங்க முடியாமலேயே உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் அனீஸ் ஜார்ஜின் தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk