நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான முக்கிய அறிவிப்புகள்: சுகாதார ஆய்வாளர் முதல் ரயில்வே, வங்கிப் பணிகள் வரை!
இந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய அடுத்த இரண்டு மாதங்களில், மத்திய மற்றும் மாநில அரசுகளில் பல்வேறு துறைகளைச் (Various Sectors) சேர்ந்த 15 வகையான போட்டித் தேர்வுகள் நடக்கவிருப்பதாகவும், அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டிய முக்கியப் பணிகளின் காலியிடங்கள் மற்றும் கடைசித் தேதிகள் குறித்த விவரங்கள்.
| துறை / நிறுவனம் | பணியிடங்கள் | தகுதி | விண்ணப்பிக்கக் கடைசி தேதி |
| தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (MRB) | 1483 (சுகாதார ஆய்வாளர்) | குறிப்பிட்ட கல்வித் தகுதி | நவம்பர் 16 |
| ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) | 8,860 | 12 ஆம் வகுப்பு / பட்டப்படிப்பு | நவம்பர் 20, நவம்பர் 27 |
| இந்திய அணுசக்திக் கழகம் (NPCIL) | 122 (துணை மேலாளர்) | BE, BTech, LLB, MBA | நவம்பர் 27 |
| இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) | 110 | BE, BTech, LLB, CA | நவம்பர் 28 |
| தேசிய வேளாண்மை வங்கி (NABARD) | 91 | பட்டப்படிப்பு | நவம்பர் 30 |
| இந்திய ரப்பர் வாரியம் | 51 | 12 ஆம் வகுப்பு, ITI, Diploma, BSc | டிசம்பர் 1 |
| இந்திய விமானப்படை | 280 | BE, BTech, BCom, BSc | டிசம்பர் 9 |
| இந்திய ராணுவம் | 1,426 | 10 அல்லது 12 ஆம் வகுப்பு | நவம்பர் 15 |
| பஞ்சாப் நேஷனல் வங்கி | 750 | பட்டப்படிப்பு | நவம்பர் 23 |
குறிப்பு:
RRB (ரயில்வே): 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் முறையே நவம்பர் 27 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மொத்த காலியிடங்கள் 8,860.
MRB (சுகாதார ஆய்வாளர்): தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1483 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆர்வமும் தகுதியும் உள்ள இளைஞர்கள், இந்த அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, உரிய காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து, தங்களது அரசுப் பணிக் கனவை நனவாக்கலாம்.
in
வேலைவாய்ப்பு
