ஜூலை 1, 2025 முதல் அமல்: 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்!
தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாபெரும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, அவர்களின் அகவிலைப்படியை (Dearness Allowance - DA) உயர்த்தி முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வால்சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்வு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்திருப்பதால், அனைத்துத் தரப்பினரிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
in
தமிழகம்
