பாதுகாப்புப் பகுதியில் நாச வேலையா? 2.5 கி.மீ தூரத்திற்கு அதிர்ந்த சத்தம்! 9 பேர் பலி என அதிர்ச்சித் தகவல்!
தலைநகர் டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைக்கு அருகில் உள்ள மிகவும் பாதுகாப்பான பகுதியில் இன்று நடந்த சக்திவாய்ந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் டெல்லி மட்டுமில்லாமல், இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டைக்கு அருகிலுள்ள பரபரப்பான சந்தை பகுதியில் திடீரென மூன்று முறை தொடர்ந்து, பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் சத்தம் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியதாகவும், அதிர்வில் கீழே விழுந்ததாக ஓர் இளைஞர் அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளதாகவும் செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
வெடிவிபத்தின் விளைவாக, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில கார்கள் தீப்பற்றி எரிந்ததாகவும், அருகிலுள்ள கடைகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் நொறுங்கி சேதமடைந்ததாகவும் முதற்கட்ட ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிவிபத்தால் தற்போது வரை எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக நெஞ்சைப் பதறவைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், உயிரிழப்புகள் ஏதும் இல்லை என டெல்லி காவல்துறையின் உத்தியோகபூர்வ அறிக்கை முதலில் தெரிவித்திருந்த நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
தகவல் அறிந்ததும், டெல்லி காவல்துறையின் உயரதிகாரிகள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் மற்றும் தேசியப் பாதுகாப்புப் படையின் சிறப்பு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்துள்ளனர். வெடிவிபத்து நடந்த பகுதி முழுவதும் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு, பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இது தீவிரவாதத் தாக்குதலின் சதிவேலையா அல்லது வேறு ஏதேனும் விபத்தா என்பது குறித்துக் காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர், டெல்லி லஜ்பத் நகர், சரோஜினி நகர், கன்னாட் பிளேஸ் போன்ற முக்கியப் பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகளைச் சந்தித்துள்ளதால், தற்போது செங்கோட்டை அருகே நிகழ்ந்த இந்தச் சம்பவம், டெல்லி மக்களிடையே மீண்டும் பாதுகாப்பு குறித்த ஆழ்ந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் பாதுகாப்புக் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான புலன் விசாரணையின் முடிவில் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
