சென்னை, கோவை, திருச்சி உட்படப் பல்வேறு நகரங்களின் உதவி ஆணையர்களுக்குப் பொறுப்புகள் மாற்றம்! பொறுப்பு டிஜிபி உத்தரவு!
தமிழக காவல்துறையில் 12 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் 12 டிஎஸ்பிக்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் வெளியிட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை உதவி ஆணையராக பணியாற்றிய சுப்பிரமணியம், கோயம்பேடு போக்குவரத்து அமலாக்கப் பிரிவு உதவி ஆணையராகவும், சென்னை ஆயுதப்படை உதவி ஆணையர் முருகராஜ், கொளத்தூர் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு உதவி ஆணையராகவும், கோயம்புத்தூர் மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் தென்னரசு, நீலகிரி மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ராஜா, திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும், திருச்சி மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் முகமது ரஃபி, தூத்துக்குடி ஆயுதப்படை துணை டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆயுதப்படை உதவி ஆணையராக இருந்த ஜோசப், அடையார் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு உதவி ஆணையராகவும்
சென்னை ஆயுதப்படை டிஎஸ்பி ஜெயச்சந்திரன், ஆவடி காவல் ஆணையப் பிரிவில் போக்குவரத்து உதவி ஆணையராகவும், புதுக்கோட்டை ஆயுதப்படை டிஎஸ்பி ஜனகிராம், கோயம்புத்தூர் மாநகர மேற்கு மண்டல காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் ஆயுதப்படை டிஎஸ்பி ஜீன் பென்சன், தாம்பரம் மாநகர போக்குவரத்து உதவி ஆணையராகவும், திருவள்ளூர் ஆயுதப்படை டிஎஸ்பி கணேஷ் குமார், தூத்துக்குடி ஆயுதப்படை டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் ஆயுதப்படை டிஎஸ்பி ரத்தினம், புதுக்கோட்டை ஆயுதப்படை டிஎஸ்பியாகவும்,
மயிலாடுதுறை ஆயுதப்படை டிஎஸ்பி கிருஷ்ணன், சென்னை பெருநகர காவல் துறையின் ஆயுதப்படை உதவியாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
