நூலகப் பொறுப்பாளரிடம் குடிபோதையில் அத்துமீறல்.. ஓய்வு பெற்ற காவலர் மகன் கைது! Otteri Police Arrests Man for Obscenity and Harassment Against Female Librarian

நூலகப் பொறுப்பாளரிடம் குடிபோதையில் அத்துமீறல்.. ஓய்வு பெற்ற காவலர் மகன் கைது!  Otteri Police Arrests Man for Obscenity and Harassment Against Female Librarian

சமூக வலைதளத்தில் வீடியோ வெளியாகி பரபரப்பு.. சம்பத்குமார் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு.. ஓட்டேரி போலீஸ் அதிரடி நடவடிக்கை!

சென்னை, நவம்பர் 18, 2025: சென்னை புளியந்தோப்பு ஏகாங்கிபுரம் குடிசை மாற்று வாரியத்தில் இயங்கி வந்த நூலகத்தில் பெண் பொறுப்பாளராகப் பணியாற்றி வந்தவரிடம், குடிபோதையில் ஆபாசமாக நடந்துகொண்டவர் மீது ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்தப் புகாரின் பேரில், குடிபோதையில் வந்த நபர் ஒருவன் அவதூறாகப் பேசி ஆபாசமாக நடந்துகொண்டது தெரிய வந்தது. விசாரணையில், அவர் ஓய்வு பெற்ற காவலரின் மகன் சம்பத்குமார் என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சம்பத்குமார் மீது தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த அழைத்துச் சென்றபோது, கைது செய்யப்பட்ட சம்பத்குமார் உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பிறகு அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks