சமூக, பொருளாதாரச் சரிவு உச்சம்: படித்த இளைஞர்களுக்கு 7,500 ரூபாய் சம்பளம்; ‘பசி’க்காகச் சூறையாடல் நிகழும் நாள் வெகு தொலைவில் இல்லை!
பாகிஸ்தானில் வரலாறு காணாத சமூக மற்றும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு வருவதாக, அந்நாட்டின் முக்கியச் சேவை அமைப்பான JDC அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சையத் ஜாஃபர் அப்பாஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டுக்கடங்காத வேலையின்மை, பணவீக்கம் மற்றும் வறுமை காரணமாக நெருக்கடி மோசமடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கராச்சியில் உள்ள படித்த இளைஞர்களின் துயரம் குறித்துப் பேசிய ஜாஃபர் அப்பாஸ், 20 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் வரை செமஸ்டர் கட்டணம் செலுத்திப் பட்டம் பெறும் இளைஞர்கள், வேலை இல்லாமல் தவிப்பதாகவும், அல்லது வெறும் இந்திய ரூபாய் மதிப்பில் ₹6,500 முதல் ₹7,500 வரை மட்டுமே சம்பளமாகப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.
ஒரு இளைஞன் பல வருடங்கள் படித்துவிட்டு, தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடக்கூடப் போதாத சம்பளத்தில் வேலைக்குச் சென்றால், அவன் எப்படி மரியாதையுடன் வாழ முடியும்? அவர்களுக்கு என்ன மாதிரியான எதிர்காலத்தை நாங்கள் வழங்குகிறோம்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், பேசிய அவர், மக்கள் தற்கொலை எண்ணத்திற்குத் தள்ளப்படுகின்றனர். அரசாங்கம் பொருளாதார நிவாரணத்தை வழங்கத் தவறியதைக் கடுமையாக விமர்சித்தார். நெருக்கடியின் உளவியல் மற்றும் சமூகத் தாக்கங்களை விவரித்தார். அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் தற்கொலை எண்ணம், திருட்டு மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாவதாகத் தெரிவித்தார்.
இன்று இதய நோய் மருத்துவமனைகளுக்கு வரும் இளைஞர்களில் இரண்டில் ஒருவருக்கு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் நம்பிக்கையின்மையே முக்கியக் காரணமாக உள்ளது. மிடில் கிளாஸ் மக்கள் "பூமிக்குள் புதைக்கப்பட்டு விட்டனர்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிக மின் கட்டணம்: மாதம் வெறும் ₹18,000 முதல் ₹28,000 வரையில் மட்டுமே ஈட்டும் குடும்பங்களுக்கு, லட்சக் கணக்கில் மின்சாரக் கட்டணம் வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் தங்கள் நகைகளையும், திருமணச் சேமிப்புகளையும் விற்று மின் கட்டணத்தையும், பள்ளிக் கட்டணத்தையும் செலுத்தி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், மக்கள் பேராசைக்காக அல்ல, பசிக்காகக் கடைகளைச் சூறையாடும் நாள் விரைவில் வரும்" என்றும் அவர் கடுமையாக எச்சரித்தார்.
இலவச மருத்துவ மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் JDC அறக்கட்டளை, ஒரு காலத்தில் நன்கொடை வழங்கியவர்கள் இப்போது உதவி கேட்பதால், தாங்களே நன்கொடைகளின்றித் தவித்து வருவதாகவும் ஜாஃபர் அப்பாஸ் தெரிவித்தார். அரசாங்கம் உடனடியாக நிவாரணத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதே நிலை நீடித்தால், மக்கள் பேராசைக்காக அல்ல, தங்கள் பசிக்காக கடைகளைச் சூறையாடும் நாள் விரைவில் வரும் என்றும் அவர் கூர்மையான எச்சரிக்கையை விடுத்தார். இலவச மருத்துவ மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வந்த JDC அறக்கட்டளை கூட தற்போது நன்கொடைகளின்றித் தவித்து வருகிறது. "ஒரு காலத்தில் நன்கொடை வழங்கியவர்களே இப்போது எங்களிடம் உதவி கேட்கிறார்கள். இந்த நாடு பொருளாதார ரீதியாகச் சரிந்து வருகிறது" என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். எனவே, அரசாங்கம் உடனடியாகப் பொருளாதார நிவாரணத் திட்டங்களை அறிவிக்க வேண்டும், குறைந்த வட்டியில் கடன்களை வழங்க வேண்டும், மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சீர்திருத்தங்களுக்கு உடனடி முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஜாஃபர் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.
