வடகிழக்குப் பருவமழை: மாநில அவசரகால மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு! CM M.K. Stalin Inspects State Emergency Operations Centre Amid Intense Northeast Monsoon

வடகிழக்குப் பருவமழை: மாநில அவசரகால மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு! CM M.K. Stalin Inspects State Emergency Operations Centre Amid Intense Northeast Monsoon

மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை; 'இயல்பை விட 58% அதிக மழை பதிவு' - முதல்வர் தகவல்; டெல்டாவில் அவசரம் இல்லை என விளக்கம்!

சென்னை, அக்டோபர் 19, 2025: தமிழ்நாட்டில் அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதன் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், எதிர்கால நடவடிக்கைகளை உறுதி செய்யவும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (அக். 19) சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகாலச் செயல்பாட்டு மையத்திற்கு (State Emergency Operation Centre) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மழை நிலவரம்: வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து, தென்காசி, தேனி, கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமான மழை பெய்து வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் இயல்பை விட 58% அதிக அளவில் மழை கிடைத்துள்ளதாக தென் மண்டல வானிலை இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளிக் காட்சி மூலம் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை அகற்றுதல், முறிந்து விழுந்த மரங்களை அகற்றுதல் போன்ற உடனடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக அரசு முழுமையாகத் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். டெல்டா பகுதிகளில் பயிர்கள் சேதமடைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவல்களைக் கூறி வருவதாக அவர் மறுப்பு தெரிவித்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பாதிக்கப்படாமல் கொள்முதல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்ட நெல் மூட்டைகளைக் கிடங்குகளுக்கு விரைவாகக் கொண்டு செல்லவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடிகால்கள், மழைநீர் வழித்தடங்கள் மற்றும் கால்வாய்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தாலும், அங்கு இதுவரை எந்தவித அவசர நிலையும் இல்லை என்று முதலமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks