அனைத்து அடிப்படைப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிப்பு: எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையனை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில், கே.ஏ. செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி, செங்கோட்டையன் மீது உடனடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி முடிவு, அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
