தங்கத்தின் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.2,400 அதிரடியாக உயர்ந்த நிலையில், ரூ.97 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியது.
வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட தங்க விலை: நேற்றைய ரூ.97,600-லிருந்து இன்று திடீர் சரிவு; வெள்ளி விலையும் கிடுகிடுவென குறைந்தது!
சென்னை, அக்டோபர் 18, 2025: கடந்த சில நாட்களாகக் கிடுகிடுவென உயர்ந்து, நகை வாங்குவோருக்குக் கவலையை அளித்த தங்கம் விலை, இன்று (சனிக்கிழமை) சற்றுக் குறைந்து காணப்படுகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ரூ.97,600 என்ற புதிய உச்சத்தை எட்டிய நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.2,000 குறைந்துள்ளதால், நகை பிரியர்களுக்குச் சற்று ஆறுதல் கிடைத்துள்ளது
ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என இருந்த தங்கம் விலை தற்போது ரூ.97 ஆயிரத்தையும் கடந்து பயணிக்கிறது. அதிலும் இம்மாதத்தில் மட்டும் விலை கிடுகிடுவென உயர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம் சென்று இருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது.
அந்த வகையில் நேற்றும் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் அதிரடியாக ஒரே நாளில் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இம்மாதத்தில் மட்டும் அதாவது கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரையிலான கடந்த 17 நாட்களில், தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,250-ம், சவரனுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து இருந்தது.
தங்கம் விலை
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) தங்கம் விலை சற்று சரிவை சந்தித்துள்ளது. இதன்படி இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.250 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,950-க்கும், சவரனுக்கு ரூ.2,000 குறைந்து, ஒரு சவரன் ரூ.95,600-க்கும் விற்பனையாகி வருகிறது. இந்த தங்கம் விலை சரிவு நகைபிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி நேற்று முன்தினம் விலையை காட்டிலும், கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.203-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் வெள்ளிவிலை இன்று கிராமுக்கு ரூ.13-ம், கிலோவுக்கு ரூ.13,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.190-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
- 18.10.2025 ஒரு சவரன் ரூ.95,600 (இன்று)
- 17.10.2025 ஒரு சவரன் ரூ.97,600 (நேற்று)
- 16.10.2025 .95,200
- 15.10.2025 ஒரு சவரன் ரூ.94,880
- 14.10.2025 ஒரு சவரன் ரூ.94,600
- 13.10.2025 .92,640