இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கும் ஒப்புதல்!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்த 9 முக்கிய மசோதாக்களுக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (அக். 31) ஒப்புதல் அளித்துள்ளார்.
இதில் முக்கியமாக, சட்டப்பேரவையில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கும் ஆளுநர் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
ஒப்புதல் அளிக்கப்பட்ட முக்கிய மசோதாக்கள்:
நிதி நிர்வாகப் பொறுப்புடைமை மசோதா: மாநிலத்தின் நிதி நிர்வாகத்தின் பொறுப்புடைமையை வரையறுக்கும் முக்கிய மசோதா இதுவாகும்.
முன்னாள் எம்.எல்.ஏ. ஓய்வூதிய உயர்வு மசோதா: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பான மசோதா.
சிறு குற்றங்களுக்கான மசோதா: சில சிறு குற்றங்களுக்குச் சிறைத் தண்டனைக்குப் பதிலாக அபராதம் விதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்த மசோதா.
சட்டப்பேரவைக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவி வந்த மசோதாக்கள் தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், இந்த 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது, தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
