நவம்பர் 24ஆம் தேதி பதவியேற்பு: தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து அறிவிப்பு!
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக (CJI) மூத்த நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மத்திய சட்டத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், வரும் நவம்பர் 23ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து நீதிபதி சூர்யகாந்த் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார்.
சட்டத் துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, நீதிபதி சூர்யகாந்த் நவம்பர் 24ஆம் தேதி அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்பார்.
in
இந்தியா
.jpg)