11 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத் துறைமுகங்களில் புயல் அச்சுறுத்தலைக் குறிக்கும் வகையில், 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் கூண்டு எச்சரிக்கை:
4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: சென்னை, எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி ஆகிய 3 துறைமுகங்களில், புயல் அச்சுறுத்தலுக்கு உட்படலாம் என்பதைக் குறிக்கும் வகையில், 4ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கவனத்துடன் இருக்க வேண்டிய பகுதிகள்:
2ஆம் எண் புயல் கூண்டு: கடலூர், நாகை, புதுச்சேரி, பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மழை வாய்ப்பு
'மோன்தா' புயலின் காரணமாக, தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இன்று (அக். 28) பிற்பகல் வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (அக். 28) பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
