குற்ற வழக்குகளின் விசாரணை விரைவுபடுத்த உத்தரவு: வழிகாட்டுதல்கள் வகுக்க முன்னாள் நீதிபதி நாகமுத்து தலைமையில் ஆலோசனைக் குழு அமைப்பு!
புதுடெல்லி, அக்டோபர் 30: குற்ற வழக்குகளில் கைதானவர்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்தும் நோக்கில், 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்ய, நாடு முழுவதும் வழிகாட்டுதல்களை வகுக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (அக். 30) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குகளில், காவல் துறையின் தாமதத்தால் பல ஆண்டுகளாகக் கைதிகள் ஜாமின் பெற முடியாமல் சிறைகளில் இருக்கும் கடுமையான நிலையையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை (60 நாட்கள்) அமல்படுத்துவது தொடர்பாக சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவைப் பின்பற்றி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சட்டத் திருத்தங்கள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்க,
சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நாகமுத்து தலைமையில் ஒரு ஆலோசனைக் குழுவை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, குற்ற வழக்குகளில் உள்ளவர்கள் விரைவான நீதி பெறுவதற்கும், விசாரணை கால தாமதத்தால் கைதிகள் சிறைகளில் வாடுவதைத் தடுப்பதற்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
