அதிக வேகத்தால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்ததையடுத்து நடவடிக்கை; பாலத்தில் எச்சரிக்கை பலகைகள் நிறுவப்பட்டுள்ளன!
ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் சில வாகன ஓட்டிகள் 100 கிலோ மீட்டர் வேகத்தைக் கடந்து செல்வதால், மற்ற பயணிகளுக்கு அச்சம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன், 160 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற கார், கோல்டுவின்ஸ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை எழுந்தது.வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தச் சாலைப் பாதுகாப்புக் கருதி, மேம்பாலத்தில் கீழ்க்கண்ட ஆறு இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உப்பிலிபாளையம்
கோல்டுவின்ஸ்
சுகுணா கல்யாண மண்டபம்
ஜி.டி. மியூசியம்
கல்லூரி
அரவிந்த் கண் மருத்துவமனை இறங்குதளம்
கண்காணிப்பு மற்றும் அபராதம்:
மேம்பாலத்தில் இருந்து இறங்கும் பகுதிகளில் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டக் கூடாது என எச்சரிக்கை பலகைகள் நடப்பட்டு உள்ளன. வாகனங்களின் வேகத்தைக் கண்காணிக்க ஏ.ஐ. கண்காணிப்பு கேமராக்கள் (A.I. Surveillance Cameras) நிறுவப்படும் எனப் காவல்துறை ஆணையர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
வேகத்தடைகள் அமைக்கப்பட்டதன் மூலம், மேம்பாலத்தில் விபத்துகள் குறைந்து பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.