காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு

காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
News Image

தொலைபேசியில் வந்த அழைப்பு

சென்னை திருமங்கலம் வி.ஆர்., வணிக வளாகத்தில் உள்ள, 'ரிலையன்ஸ் டிஜிட்டல்' ஷோரூமில், விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் மாதேஷ் ( வயது 24 )  இவரை, 14 - ம் தேதி மாலை, ஷோரூமில் உள்ள மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய பெண், தன்னை சரண்யா என அறிமுகப்படுத்தி உள்ளார்.

அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதாகவும், இரண்டு ஐ - போன்கள் மற்றும் ஆப்பிள் ஏர்பார்ட்ஸ் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவற்றை மருத்துவமனைக்கு கொண்டு வந்து கொடுத்து, 'கிரெடிட் கார்டு' மூலம் பணத்தை வாங்கி கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

அப்பெண் குறிப்பிட்டபடி, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மறுநாள் சென்ற மாதேஷ், இரண்டு ஐ - போன்கள் மற்றும் ஏர்பார்ட்ஸை அவரிடம் கொடுத்துள்ளார். அவற்றை வாங்கிக் கொண்ட அப்பெண், தனது தாயாரிடம் வீடியோ காலில் காண்பித்து வருவதாக கூறி, மருத்துவமனையின் உள்ளே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை.

போலீசில் புகார்

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாதேஷ், அமைந்தகரை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா ( வயது 28 ) என்பவர் நுாதன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், பிசியோ உதவியாளர் படிப்பை முடித்த அவர், சென்னையில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கி, மருத்துவமனைகளில் வேலை தேடி வந்தது தெரிய வந்தது.

அவரது காதலன் ஐ - போன் கேட்டதால் நுாதன திருட்டில் ஈடுபட்டதும், திருடிய ஐ - போன் மற்றும் ஏர்பார்ட்ஸை காதலனிடம் கொடுத்ததும் தெரிய வந்தது. சரண்யாவை கைது செய்த போலீசார் ஒரு ஐ - போனை பறிமுதல் செய்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks