தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு சவரன் ₹95,200-ஐ கடந்து வரலாறு பதிவு; ஒரே நாளில் ₹320 உயர்வு! Gold Price Hits New Peak, Crosses ₹95,000 Per Sovereign for the First Time in History; Rises by ₹320

தொடர் விலை உயர்வால் அதிர்ச்சி; வெள்ளி விலை இன்று சற்றுக் குறைந்தது!

சென்னை, அக்டோபர் 16: ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக வரலாறு காணாத அளவுக்குத் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (அக். 16) ஒரு சவரன் விலை ரூ. 95,000-ஐக் கடந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

தங்கத்தின் விலை:

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் மேலும் அதிகரித்துள்ளது. இன்று ஒரு சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது.

வரலாற்றில் முதல்முறையாக கடந்த 7-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 90,000-ஐ கடந்த நிலையில், அதைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை என இருவேளையிலும் விலை அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 14-ஆம் தேதி ரூ. 1,960-ம், நேற்று (அக்.15) ரூ. 280-ம் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 94,880-க்கு விற்பனையானது.

இன்றைய விலை:

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் மேலும் அதிகரித்துள்ளது. இன்று ஒரு சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 11,900-க்கும், ஒரு சவரன் ரூ. 95,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

வெள்ளி விலை:

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதிரடியாக உயர்ந்து வந்த வெள்ளியின் விலை நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்று சற்றுக் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்த நிலையில், ஒரு கிராம் வெள்ளி ரூ. 206-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்தக் தொடர் விலை உயர்வுக்குக் காரணம் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk