WHO மற்றும் ICMR முத்திரை அச்சிடப்பட்ட ORS கரைசல்கள் மட்டுமே விற்க வேண்டும் எனத் தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவு!
தமிழ்நாட்டில் உள்ள மருந்தகங்கள் மற்றும் கடைகளில் 'ORSL' (ஓ.ஆர்.எஸ்.எல்) என்ற வர்த்தகப் பெயரைக் கொண்ட கரைசல்களைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று சுகாதாரத்துறை கடுமையாக உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறினால், சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
உடல் நலக் குறைவு மற்றும் நீரிழப்பு (Dehydration) ஏற்படும்போது பயன்படுத்தப்படும் ORS (Oral Rehydration Salts) கரைசல்கள் குறித்துத் தமிழ்நாடு சுகாதாரத்துறை இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மருந்தகங்கள் மற்றும் கடைகளில் 'ORSL' என்ற லேபிளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கரைசல்களை விற்பனை செய்யக் கூடாது.
அதற்குப் பதிலாக, உலக பொது சுகாதார அமைப்பு (WHO) மற்றும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (ICMR) ஆகிய அமைப்புகளின் முத்திரை அச்சிடப்பட்ட ORS (Oral Rehydration Salts) கரைசல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
4பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
