நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, அந்தக் கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) நேற்று இணைந்த மூத்த அரசியல்வாதியும், புகழ்பெற்ற பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்துக்கு, இன்று கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நாஞ்சில் சம்பத், தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கட்சித் தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாஞ்சில் சம்பத் கட்சியில் இணைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கட்சியின் தலைவர் விஜய், "நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்தது எனக்குப் பெருமகிழ்ச்சி," எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் நாஞ்சில் சம்பத்தை 'மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர், சிறந்த பேச்சாளர், இனிமையாகப் பழகக்கூடியவர்' என்று புகழாரம் சூட்டியுள்ளார். நாஞ்சில் சம்பத்தின் இந்த நியமனம், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் களப் பரப்புரைகளுக்கு மேலும் வலுவூட்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
