வீட்டு வசதி வாரிய மோசடி வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லங்களில் ED சோதனை!

வீட்டு வசதி வாரிய மோசடி வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லங்களில் ED சோதனை!

வீட்டு வசதி வாரிய மோசடி வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லங்களில் ED சோதனை!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தொடர்புடைய சென்னை, மதுரை, திண்டுக்கல்லில் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில், அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, மதுரை, திண்டுக்கல் உட்பட ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில்இந்தச் சோதனைனை நடந்து வருகிறது.

திண்டுக்கல் துரைராஜ் நகரில் உள்ள ஐ.பெரியசாமியின் இல்லம், சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீடு, மற்றும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதியில் உள்ள அவரது அறை ஆகியவற்றில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், அவரது மகனும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் வீடு மற்றும் திண்டுக்கல் கோவிந்தாபுரம், அசோக்நகரில் உள்ள அவரது மகள் இந்திராணி இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 2006-2011 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதி வாரிய அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தபோது, அப்போதைய காவல்துறை ஐ.ஜி. ஜாபர் சேட்டுக்கு சட்டத்திற்குப் புறம்பாக இடம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கு, பின்னர் அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 2022-ஆம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி 9 மணி நேரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போதுஇந்தச் சோதனைனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோதனை நடைபெறும் இடங்களில், துணை ராணுவப் படையான சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்தும் இந்த அதிரடி சோதனை, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks