ஃபலூடா ஆசையை தூண்டி 4 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை..!

மும்பை:

ஃபலூடா வாங்க காசு தருவதாகச் சொல்லி சிறுவர்கள் நால்வரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபரை மும்பை போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.

மும்பையின் கிழக்கு புறநகர் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்தேறியிருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் 30 வயதுடைய நபரை பாலியல் குற்றங்களுக்காக பிரிவு 354ஏ-ன் கீழ் கைது செய்த போலிஸார் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி, இந்த பாலியல் குற்றச் சம்பவம் கடந்த மார்ச் 24,31 ஆகிய தேதிகளில் நடைபெற்றிருக்கிறது. கைது செய்யப்பட்ட அந்த நபர் பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர் ஆவார்.

ஃபலூடா வாங்குவதற்கு 50 ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி 9 வயதுடைய சிறுவனை தனது அறைக்குள் அழைத்து பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார் அந்த நபர்.

இதனையடுத்து பயந்தபடியே வீட்டுக்குச் சென்ற அந்த சிறுவன் அவனது தாயாரிடம் நடந்தவற்றை கூறியிருக்கிறார். அதன் பிறகு சிறுவனின் தாயார் கொடுத்த புகாரின்படியே குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதுபோக, 9 வயது சிறுவன் மட்டுமல்லாமல் 8 முதல் 12 வயது வரை உள்ள மேலும் மூன்று சிறுவர்களிடமும் அந்த கயவன் ஃபலூடா ஆசையை தூண்டி பாலியல் தொந்தரவு செய்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

பின்னர், சிறுவர்கள், சிறுமிகளின் பெற்றோர்களிடம் தங்களிடம் குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ள உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள் குறித்து கண்காணிக்க வேண்டும் எனவும் போலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!