Jana Nayagan Audio Launch: மலேசியாவில் பரபரப்பு: தளபதி திருவிழாவில் தவெக கொடியை காட்டிய ரசிகர் கைது! மைதானத்தில் அதிரடி காட்டிய போலீசார்! Fan Arrested in Malaysia for Waving Vijay's TVK Political Flag

அரசியலுக்குத் தடை: ரசிகர்களை அமைதிப்படுத்திய விஜய்! ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று விண்ணதிரும் உற்சாகத்துடன் நடைபெற்றது. இதில் அரசியல் அடையாளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தவெக கொடியை ஏந்திய ரசிகர் ஒருவர் அந்நாட்டுப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலுக்கிடையே, ‘தளபதி’ விஜய்யின் 69-வது மற்றும் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று (டிச. 27) மிக பிரம்மாண்டமாக அரங்கேறியது. இந்த விழாவிற்காக மலேசியா சென்ற விஜய்க்கு அந்நாட்டு ரசிகர்கள் ‘மாஸ் எண்டரி’ கொடுத்து வரவேற்ற வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. இசை வெளியீட்டு விழா தொடங்குவதற்கு முன்பே, இது ஒரு கலை நிகழ்ச்சி என்பதால் தமிழக வெற்றிக் கழகம் சார்ந்த கொடிகளோ அல்லது அரசியல் கருத்துகளோ இடம்பெறக் கூடாது என மலேசிய அரசு விழா ஏற்பாட்டாளர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும், மைதானத்தில் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த தீவிர ரசிகர் ஒருவர், உற்சாக மிகுதியால் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கொடியைத் கையில் ஏந்தித் தூக்கிப் பிடித்துள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலான சில நிமிடங்களிலேயே, அங்கிருந்த மலேசிய போலீசார் அந்த ரசிகரை மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தி அதிரடியாகக் கைது செய்தனர். சட்ட விதிமுறைகளை மீறியதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை அங்கிருந்த ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக, விஜய் மேடைக்கு வந்தபோது ரசிகர்கள் ‘டிவிகே.. டிவிகே..’ என முழக்கமிட்டனர். உடனடியாக விஜய் தனது கைகளை அசைத்து, “இங்கே இது வேண்டாம், அமைதியாக இருங்கள்” என்று செய்கை மூலம் கேட்டுக் கொண்டது அவர் சட்ட விதிகளை மதிப்பவர் என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்தது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்ற தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி 9, 2026 அன்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டுத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே வெளியான மூன்று பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு ‘சர்ப்ரைஸ்’ அளிக்கும் விதமாக மேலும் ஒரு பாடல் படத்தில் இருப்பதாகப் பாடலாசிரியர் விவேக் மேடையில் அறிவித்தது ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால், ஒட்டுமொத்தத் திரை உலகமும் இந்த ‘ஜனநாயகன்’ வெளியீட்டிற்காகத் தவம் கிடக்கிறது.




Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk