பிங்க் பேட்ரோல் ரோந்துப் பணி தொடக்கம் – 165 ஆண்டு பழமையான காவல் நிலையம் குழந்தை பாதுகாப்பு மையமாக மாற்றம்! Pink Patrol Launched in Ooty to Curb Crimes Against Children and Ensure Women's Safety in Public Places.

பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் நடவடிக்கை; மேற்கு மண்டல தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்!


ஊட்டி, அக்டோபர் 4, 2025: நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பெண்கள் தயக்கமின்றிப் பொது இடங்களில் சென்று வரவும் உதவும் வகையில் 'பிங்க் பேட்ரோல்' (PINK Patrol) இருசக்கர ரோந்து வாகனச் சேவையையும், ஆங்கிலேயர் காலப் பழமை வாய்ந்த காவல் நிலையக் கட்டிடத்தைப் புனரமைத்துக் காவலர்களின் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையத்தையும் (Children's Protection Centre) உதகையில் இன்று மேற்கு மண்டலக் காவல்துறைத் தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

ஆங்கிலேயர் காலக் கட்டிடம் புதுப்பொலிவு:

ஊட்டி நகரின் மத்தியில் உள்ள நகர மத்திய காவல் (பி1) நிலையம் 1850-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, 1860 முதல் காவல் நிலையமாகக் கட்டிடமாகக் செயல்பட்டு வந்தது. பழமை வாய்ந்த இக்கட்டிடத்தை இடிக்க எழுந்த எதிர்ப்பால், இடிக்கும் பணி கைவிடப்பட்டு அருகில் புதிய காவல் நிலையம் கட்டப்பட்ட நிலையில், பழைய கட்டிடம் தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ளது.

கட்டிடத்தின் உட்புறச் சுவர்களில் குழந்தைகளைக் கவரும் வகையில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மற்றும் விலங்குகளின் உருவங்கள் வரையப்பட்டு, அந்தக் கட்டிடம் தற்போது காவலர்களின் குழந்தைகளைப் பாதுகாக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மையத்தை இன்று மேற்கு மண்டலத் தலைவர் செந்தில்குமார் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.

பிங்க் பேட்ரோல்' ரோந்து சேவை:

இதனைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பை (Safety for Women) உறுதி செய்யவும் 'பிங்க் பேட்ரோல்' என்ற பெயரிலான இருசக்கர ரோந்து வாகனச் சேவையையும் அவர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

இது குறித்துப் பேசிய மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் செந்தில்குமார், இந்தப் பிங்க் பேட்ரோல் இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களான உழவர் சந்தை, சேரிங்கிராஸ், சுற்றுலாத் தலங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி துவங்கும், முடியும் நேரங்களில் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள்," என்று தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks