கனவு கலைந்தது.. திருமணத்திற்கு சில நாட்களில் புதுப்பெண் விபத்தில் பலி: கர்நாடகாவில் சோகம்! A Tragic Incident in Karnataka: Bride-to-be Dies in Road Accident Days Before Wedding

கனவு கலைந்தது.. திருமணத்திற்கு சில நாட்களில் புதுப்பெண் விபத்தில் பலி: கர்நாடகாவில் சோகம்! A Tragic Incident in Karnataka: Bride-to-be Dies in Road Accident Days Before Wedding

சகோதரருடன் பைக்கில் சென்றபோது அரசுப் பேருந்து மோதியதால் விபத்து; குடும்பத்தார் பெரும் சோகத்தில்!


கர்நாடக மாநிலம் ஷிவமோகாவைச் சேர்ந்த இளம் பெண் கவிதா, இன்னும் சில நாட்களில் திருமணம் செய்து கொள்ளவிருந்த நிலையில், கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினரின் கனவுகள் ஒரே விபத்தில் சிதைந்துபோயுள்ளன.

நேற்று முந்தினம் (செப். 9 ), கவிதா தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஒரு அரசுப் பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில், பேருந்தின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில், கவிதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக, படுகாயங்களுடன் அவரது சகோதரர் உயிர் தப்பினார்.

திருமணம் நடக்கவிருந்த மகிழ்ச்சியான தருணத்தில், கவிதாவின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரைத் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் ஒரு நொடியில் சோக நிகழ்வாக மாறியுள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks