கரூரில் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் பயங்கரம்: நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழப்பு? Karur Vijay Campaign Tragedy: 33 Feared Dead in Stampede? - CM Stalin to Visit Karur Tomorrow!

சிறுவர்கள், பெண்கள் உட்படப் பலர் மயக்கம், 12 பேர் கவலைக்கிடம்; நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் பயணம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட மக்கள் சந்திப்புப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசல் காரணமாக, சிறுவர்கள், பெண்கள் உட்படப் பலர் மயக்கமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், ஆரம்பத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 33 ஆக உயர்ந்திருக்கலாம் என்றும், 12 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரப்புரை மற்றும் கூட்ட நெரிசல்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்புப் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று (சனிக்கிழமை) நாமக்கல்லில் பரப்புரையை நிறைவு செய்தபின், கரூரில் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார்.

கரூரில் நடைபெற்ற பிரசாரத்தின்போது, கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதில், சிறுவர்கள், பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

சிகிச்சையில் பெரும் சிக்கல்

மயக்கமடைந்தவர்களை நிர்வாகிகள் கூட்டத்திற்குள் இருந்து தூக்கிக் கொண்டு வெளியேற முயன்றனர். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சுகள் வரிசையாக வந்தபோதிலும், கடுமையான நெரிசல் காரணமாக அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

மயக்கமடைந்தவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மயங்கிய சிறுவர், சிறுமிகளைப் பெற்றோர்கள் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக இருந்தன. சிகிச்சைக்காக மேலும் பலர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறார்கள்.

அதிகாரிகளின் நேரில் ஆய்வு

சம்பவ இடத்திற்குக் கரூர் போலீஸ் சூப்பிரெண்டு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தினார். மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை குறித்துக் கேட்டறிந்து வருகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் பயணம்:

இந்தத் துயரச் சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கரூர் சென்று, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!