வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் தேர்வுப் பணிகளைப் பார்வையிட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப.!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் II & IIA தேர்வுகளை எழுதுவதை, இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆட்சியர் கண்காணித்தார்.
தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி, அமைதியான சூழலில் தேர்வு நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, வட்டாட்சியர் ஆனந்தன் அவர்கள் உடன் இருந்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி ஆய்வு, தேர்வு மையங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.