எங்கள் வீட்டுப் பிள்ளைகள் இறந்திருக்காங்க; இதுக்கு முழுக்க முழுக்க செந்தில் பாலாஜிதான் பொறுப்பு - விஜய் மீது தப்பில்லை என மக்கள் கொந்தளிப்பு!
கரூர் வேலுச்சாமிபுரம் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்துப் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது. தங்கள் உறவினர்களை இழந்து தவிக்கும் பெண்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரியாகச் செய்யாததற்காக ஆளும் தி.மு.க. மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
உயிரிழந்த தங்கள் உறவினரை நினைத்து அழுதுகொண்டிருந்த ஒரு பெண்மணி, செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசியதாவது:
எங்கள் வீட்டுப் பிள்ளைகள்தான் இறந்து இருக்காங்க. இதுக்கு முழுக்க முழுக்க செந்தில் பாலாஜிதான் காரணம்! இவ்வளவு பெரிய கூட்டத்துக்கு ஏன் இவங்க பாதுகாப்பு கொடுக்கல? இது விஜய் சார் மேல நாங்க தப்பு சொல்ல முடியாது. அவர் காரணம் கிடையாது.
நாங்க 10,000 பேர்தான் வருவோம்னு அனுமதி கேட்டாங்களாம். ஆனா, பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்தப்போ, ஏன் எங்களுக்குத் தேவையான பாதுகாப்பு கொடுக்கல? செந்தில் பாலாஜி இங்க மந்திரி (அமைச்சர்) ஆச்சே, அவர்தான் எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணி இருக்கணும். ஆனால், அவர் அலட்சியமா இருந்ததுதான் காரணம்! என்று அந்தப் பெண்மணி கண்ணீருடன் குற்றம் சாட்டினார்.
கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குத் த.வெ.க. தலைவர் விஜய் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியின் அலட்சியமே இதற்குக் காரணம் என்றும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புணர்வும் ஆவேசமும் நிலவி வருகிறது.