முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகக் உள்ளிட்டோருக்கும் கட்டுப்பாடு; வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரிக்கும் உயர் மட்டக்குழுவின் நடவடிக்கை!
காட்மாண்டு: நேபாளத்தில் அண்மையில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் உயர் மட்டக்குழு, நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகக் உள்ளிட்டோர் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்க வேண்டும் என்று நேபாள அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
வன்முறைச் சம்பவங்களில் இவர்களுக்கு இருக்கும் தொடர்பு குறித்து உயர் மட்டக்குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இவர்கள் விசாரணை முடியும் வரை நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க இந்தத் தடை விதிப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த உயர் மட்டக்குழுவின் பரிந்துரையை ஏற்று, அரசு விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.