சுந்தர் பிச்சை முதல் எலான் மஸ்க் வரை: அமெரிக்காவை ஆட்சி செய்யும் பலரும் ஒரு காலத்தில் H1-B விசா பயனாளிகளே!
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர்சத்யா நாதெள்ளா ஆகியோர் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று இந்த விசா மூலம் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர். அதேபோல், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான உலகப் பணக்காரர் எலான் மஸ்க், தென் ஆப்ரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்றவர். பெப்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இந்திரா நூயியும் H1-B விசா பயன்படுத்தி அமெரிக்காவில் குடியேறியவர்தான்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்பும் ஸ்லோவேனியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்றபோது, மாடலிங் தொழிலுக்காக இந்த விசா மூலம் அங்கு தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
in
உலகம்