60 ஆண்டுக்கால சேவைக்குப் பின் போர் விமானங்களுக்கு ஓய்வு; சண்டிகரில் பிரம்மாண்டமாக நடக்கிறது ஓய்வு விழா!
சண்டிகர், செப்டம்பர் 25: சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய விமானப்படைக்குச் சேவை செய்து வந்த மிக்-21 (MiG 21) ரக போர் விமானங்கள், நாளை முதல் அதிகாரப்பூர்வமாகப் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றன. இந்த போர் விமானங்களுக்கு, பாரம்பரிய முறைப்படி 'வாட்டர் சல்யூட்' வழங்கி கௌரவம் செலுத்தப்பட்டது.
இந்திய விமானப்படைக்கு ஒரு காலத்தில் முதுகெலும்பாகத் திகழ்ந்த மிக்-21 ரக விமானங்கள், பல்வேறு போர்களில் முக்கியப் பங்காற்றியுள்ளன. இந்நிலையில், இந்த விமானங்கள் நாளையுடன் முழுமையாகப் பணியிலிருந்து விலக்கப்படுகின்றன. மிக்-21 விமானங்களுக்கு ஓய்வு அளிக்கும் விழா, நாளை சண்டிகர் விமானப்படை விமான நிலையத்தில் நடைபெற உள்ளது.
அதற்கு முன்பாக, சண்டிகர் விமானப்படை தளத்தில், மிக்-21 விமானங்களுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து, விமானங்கள் 'வாட்டர் சல்யூட்' வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்த நிகழ்வு விமானப்படை வீரர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
in
இந்தியா