பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு; சட்ட நடவடிக்கை தொடக்கம்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு கிரேன் மூலம் மாலை அணிவித்த விவகாரத்தில், த.வெ.க. மாவட்டச் செயலாளர் உட்பட மூன்று பேர் திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கடந்த சனிக்கிழமை திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய்க்கு, கிரேன் உதவியுடன் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. இது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, மாவட்டச் செயலாளர் மதன், நிர்வாகிகள் மனோ, அன்பு மற்றும் கிரேன் உரிமையாளர் என நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் மதன், நிர்வாகிகள் மனோ, அன்பு ஆகிய மூவரும் இன்று திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன் சரணடைந்தனர். இந்தச் சம்பவம், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
in
தமிழகம்