புதிய பாதுகாப்பு அப்டேட், தொழில்நுட்ப உதவிகள் கிடைக்காது என மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு; பயனர்கள் விண்டோஸ் 11-க்கு மாற வேண்டிய கட்டாயம்!
உலக அளவில் அதிகப் பயனாளிகளைக் கொண்ட இயங்குதளங்களில் ஒன்றான விண்டோஸ் 10-க்கு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அளித்து வரும் ஆதரவை விரைவில் நிறுத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் அக்டோபர் 14 ஆம் தேதிக்குப் பிறகு விண்டோஸ் 10 இயங்குதளத்துக்கு எந்தவிதமான புதிய ஆதரவும் கிடைக்காது.
விளைவுகள் என்ன?
அக்டோபர் 14-க்குப் பின்னர், விண்டோஸ் 10 இயங்குதளத்துக்குப் பயனாளர்களுக்கு:
புதிய பாதுகாப்பு அப்டேட்கள் (Security Updates) கிடைக்காது.
புதிய தொழில்நுட்ப ஆதரவுகள் (Technical Support) கிடைக்காது.
இதனால், விண்டோஸ் 10 பயன்படுத்தி வரும் பயனர்கள், தங்கள் கணினியின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டை உறுதி செய்ய, காலாவதி தேதிக்குள் விண்டோஸ் 11 போன்ற புதிய இயங்குதளங்களுக்கு உடனடியாக மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.