பாஜக, அதன் கூட்டணிக் கட்சியிடமிருந்து மாநிலத்தை மீட்க உடன்பிறப்பே வா பரப்புரை; ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% வாக்காளர்களை இலக்கு வைக்க திமுக உத்தரவு!
புதுச்சேரியில் திமுக உறுப்பினர் சேர்க்கைப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காகவும், அக்கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகழகக் கொள்கைப் பரப்புச் செயலாளருமான எஸ். ஜெகத்ரட்சகன், எம்.பி. தலைமைக் கழகத்தால் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் பெயரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உறுப்பினர் சேர்க்கைக்கான இலக்குகள்:
பரப்புரையின் நோக்கம்: "மத்திய பாஜக அரசின் பாசிச ஆதிக்கத்திலிருந்தும், அதற்கு துணை நிற்கும் புதுச்சேரி பாஜக கூட்டணி அரசிடமிருந்தும் மாநிலத்தை மீட்டு, புதுச்சேரியின் 'மண்-மொழி-மானம்' காக்க, திமுக சார்பில் “உடன்பிறப்பே வா" பரப்புரை முன்னெடுக்கப்படும்.
இலக்கு:புதுச்சேரியின் 30 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும். பாசிச பாஜக கூட்டணி ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை திமுகவில் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும்.
பொறுப்பாளர்: இப்பணியை ஒருங்கிணைத்துச் செயலாற்ற திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாநிலக் கழகத்தின் அனைத்து மட்டச் செயலாளர்கள் உட்பட அனைவரும் இந்த உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தில் முழு மூச்சோடு இணைந்து பணியாற்றி, நிர்ணயிக்கப்பட்ட 30% வாக்காளர்களைக் கழக உறுப்பினராக்கிட வேண்டும் என்ற இலக்கை அடைந்திட வேண்டும் என்று துரைமுருகன் தனது அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.