கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விசாரிக்கக் கோரி இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மனுத்தாக்கல்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் மக்கள் சந்திப்புப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விசாரிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையத்தில் (National Human Rights Commission - NHRC) தவெக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாகத் தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தேசிய மனித உரிமை ஆணையத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
நெரிசலைக் கட்டுப்படுத்தத் தவறியது, போதிய பாதுகாப்புக் குறைபாடு மற்றும் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்துத் தேசிய அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்தக் கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
in
தமிழகம்