பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தல்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கத்தார் நாட்டின் ஆட்சியாளர் ஷேக் தமீன் பின் ஹமத் அல் தானியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த உரையாடலின்போது, இஸ்ரேல் நாடு கத்தார் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிரதமர் மோடி கடும் கண்டனத்தையும், தனது கவலையையும் தெரிவித்தார். இது போன்ற வன்முறைச் செயல்கள் பிராந்திய அமைதியைக் குலைக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், எந்தவொரு பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியிலான அணுகுமுறையின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.