ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு; பாடல்களைப் பாடி, பாட வரிகளால் மாலை அணிந்து மரியாதை!
திருவள்ளூர், செப்டம்பர் 25: பிரபல பின்னணிப் பாடகர் பாடும் நிலா எஸ்பிபி-யின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்பிபியின் நினைவிடம் கட்டுமானப் பணிகளுக்காகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். எனினும், அவர்கள் பண்ணை வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த எஸ்பிபியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். சிலர், அவர் பாடிய பாடல்களை பாடி அவரை நினைவு கூர்ந்தனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சாந்தி ராஜ் என்ற இளைஞர், எஸ்பிபி பாடிய 188 பாடல்களின் வரிகளை எழுதிய மாலையை அணிந்து வந்து மரியாதை செலுத்தியது அனைவரையும் நெகிழச் செய்தது. "நினைவு நாளிலும் எஸ்பிபி-க்கு அஞ்சலி செலுத்த முடியாதது பெரும் ஏமாற்றம். அவரது நினைவிடத்தை விரைவில் முடித்து, பிறந்த நாளில் திறக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
in
தமிழகம்