விஜய்க்கு அனுமதி கொடுத்திருக்க வேண்டும், மக்களையும் பாதுகாத்திருக்க வேண்டும்; அரசு இரண்டு இடங்களிலும் தோற்றுவிட்டது!
கரூர் மக்கள் சந்திப்புப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தத் துயரச் சம்பவத்துக்கு அரசு நிர்வாகமே பொறுப்பு என்று குற்றம் சாட்டினார்.
விஜய் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு:
கரூர் நெரிசலுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்தான் முதல் குற்றவாளி என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய அண்ணாமலை, விஜய் தான் Accused நம்பர் 1 (முதல் குற்றவாளி) என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அரசு மீதான குற்றச்சாட்டு:
இந்தச் சம்பவத்தில் மாநில அரசின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்த அவர், அரசு இரண்டு இடங்களிலும் தோற்று இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
நடிகர் விஜய்க்கு அனுமதி கொடுக்க வேண்டும்; அதேசமயம் கூட்டத்துக்கு வரும் மக்களையும் பாதுகாக்கும் வேலையை அரசு செய்திருக்க வேண்டும். இந்த இரண்டு முக்கியப் பணிகளையும் அரசு செய்திருக்க வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு முதல் முறையாக இப்படி ஒரு பெரிய நெரிசல் ஏற்பட்டு, இவ்வளவு துயரச் சம்பவம் நடந்திருக்கிறது. அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.