கோப்பையையும் பதக்கங்களையும் எடுத்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறிய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர்; கோப்பை இல்லாமல் கொண்டாடியது இந்தியா!
துபாய்: ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் பெருமைக்குரிய தருணத்தில், ஆசியக் கோப்பையைக் கைப்பற்றும் நிகழ்வு சர்ச்சைக்குரியதாக மாறியது.
கோப்பையை வாங்க மறுப்பு:
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரும், பாகிஸ்தானின் அமைச்சருமான மோஷின் நக்வி அவர்கள், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்களுக்குக் கோப்பையையும், பதக்கங்களையும் வழங்கத் தயாராக இருந்தார்.
ஆனால், இந்திய வீரர்கள் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர், பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வி கைகளிலிருந்து நேரடியாகக் கோப்பையை வாங்க மறுப்பு தெரிவித்தனர்.
கோப்பை இல்லாமல் கொண்டாட்டம்:
பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான அரசியல் பதற்றம், மைதானத்திற்கு வெளியிலும் எதிரொலித்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.