நெல்லை அருகே ஜெபம் செய்யச் சென்றவர்களுக்குக் குங்குமம் பூசிய பாஜகவினர்: 3 பேர் மீது வழக்குப் பதிவு! BJP/Hindu Front members file case for applying Kumkum on people who went for prayer near Nellai

மதப் பிரச்சாரம் எனக் கூறி வழிமறித்து ரகளை; கொலை மிரட்டல், மத உணர்வைப் புண்படுத்தியதாகப் புகார் - சுத்தமல்லி போலீசார் விசாரணை!

                                        

நெல்லை அருகே ஜெபம் செய்யச் சென்றவர்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர், அவர்களை வலுக்கட்டாயமாகக் குங்குமம் பூசி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், 3 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சம்பவத்தின் பின்னணி:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலிருந்து சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கடந்த 22-ஆம் தேதி கீழக்கல்லூர் மற்றும் நடுக்கல்லூர் கிராமங்களுக்குச் சென்றனர். அவர்கள் கீழக்கல்லூர் பகுதியில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மகாதேவன், பா.ஜ.க.வைச் சேர்ந்த அங்குராஜ் உட்பட 3 பேர் வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அனுமதியில்லாமல் நுழைந்து, மதப் பிரச்சனையைத் தூண்டும் வகையில் செயல்படுகிறீர்கள் என்று கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. மேலும், பிரச்சாரம் செய்ய வந்த குழுவினரில் சிலரை அருகிலிருந்த கோவிலுக்கு அழைத்துச் சென்று, நெற்றியில் குங்குமம் பூசி, கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டுச் செல்லும்படி வற்புறுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.

வழக்கறிஞர் அளித்த புகார்:

இந்தச் சம்பவம் குறித்து ஆலங்குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் டேவிட் நிர்மல்துரை என்பவர், கடந்த 22-ஆம் தேதி சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தான் ஒரு வழக்கறிஞர் என்றும், கிறிஸ்தவ சபைகளில் பிரசங்கம் செய்யும் ஊழியராகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். உடல்நலம் குன்றிய ஒருவருக்காக ஜெபம் செய்யச் சென்றபோது, தங்களை வழிமறித்த மூவர், இந்த ஊருக்குள் ஜெபம் செய்ய வந்தால் வெட்டிக் கொன்றுவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வலுக்கட்டாயமாக நெற்றியில் குங்குமம் பூசி மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

3 பேர் மீது வழக்குப் பதிவு:

இந்த புகாரின் அடிப்படையில், மணிகண்டன் மகாதேவன், அங்குராஜ் மற்றும் அவரது சகோதரரான சங்கர் ஆகிய மூன்று பேர் மீது சுத்தமல்லி காவல்துறையினர் இந்திய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 126(2) (மத அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்), 299 (கொலை மிரட்டல்), மற்றும் 351(2) (கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!