உலகின் 'டிரெண்ட் செட்டர்'ருக்கு பிறந்தநாள்! கூகுளுக்கு இன்று 27-வது ஹாப்பி பர்த்டே!
தேடல் சாம்ராஜ்யம்' கொண்டாட்டம்; ஆரம்பகால வரலாற்றை நினைவுபடுத்த 1998 வின்டேஜ் லோகோ டூடுல்!
1998-ம் ஆண்டின் 'வின்டேஜ்' லோகோவை டூடுலாக (Doodle) வெளியிட்டு கிராஃபிக்ஸ் ட்ரீட்டுடன் கொண்டாட்டம்!
உலகின் கிங் ஆஃப் சர்ச் இன்ஜின் என வர்ணிக்கப்படும் கூகுள் நிறுவனம், இன்று (செப்டம்பர் 27) தனது 27-வது பிறந்தநாளை 'கிராஃபிக்ஸ் ட்ரீட்'டுடன் கொண்டாடி வருகிறது.
கூகுள் தொடங்கப்பட்ட இந்த முக்கிய நாளை முன்னிட்டு, அதன் ஆரம்பகால வரலாற்றுப் பதிவை நினைவுபடுத்தும் விதமாக, 1998ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட வின்டேஜ் லோகோவை டூடுலாக (Doodle) வெளியிட்டு இந்த 'செலிபிரேஷன்' செய்துள்ளது.
லேரி பேஜ், செர்ஜி பிரின் தொடங்கிய பிக் ப்ராஜெக்ட்
லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரண்டு தொழில்நுட்ப மேதைகளால், 1998ஆம் ஆண்டு இந்தக் கூகுள் திட்டம் தொடங்கப்பட்டது. குறுகிய காலத்திலேயே, ஒட்டுமொத்த உலக மக்களின் தேடல் மற்றும் தகவல் தேவையைப் பூர்த்தி செய்யும் மிக முக்கியமான தளமாக இது உருமாறியது.
இன்றைக்கு, கூகுள் இல்லாமல் ஒரு நாளும் இல்லை என்னும் அளவுக்கு, மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் இது இரண்டறக் கலந்துவிட்டது. இன்றும் உலக அளவில் தேடல் தொழில்நுட்பத்தில் கூகுள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கூகுள் இன்று தனது 27-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்தச் சிறப்பு நிகழ்வில், உலகம் முழுவதிலும் இருந்து தொழில்நுட்பத் துறை மற்றும் பொதுமக்களின் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.