இளம் சாதனையாளர்களுக்கான PM YASASVI கல்வி உதவித்தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்! PM YASASVI Scholarship 2025-2026 National Scholarship Portal Application

இளம் சாதனையாளர்களுக்கான PM YASASVI கல்வி உதவித்தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!  PM YASASVI Scholarship 2025-2026 National Scholarship Portal Application

BC/MBC/DNC பிரிவினருக்கு மத்திய அரசின் திட்டம்; விண்ணப்பிக்கக் கடைசி நாள் செப். 30, 2025 - சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்!

சென்னை: இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் (PM YASASVI – Top Class Education in Schools) கீழ் கல்வி உதவித்தொகை பெற, தகுதியுடைய மாணவர்கள் உடனடியாக தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் எனச் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அவர்கள் அறிவித்துள்ளார்.

உதவித்தொகை விவரம்:

இந்தக் கல்வி உதவித்தொகைத் திட்டமானது, இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

தகுதி மற்றும் விண்ணப்ப முறை:

பயனாளிகள்: 2025-2026 ஆம் ஆண்டிற்குத் தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, பட்டியலிடப்பட்ட (Top Class Schools) பள்ளிகளில் பயிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.

வருமான வரம்பு: இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

புதிய விண்ணப்பம்:  நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்கள் கைப்பேசி எண் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்து OTR Number (One Time Registration) பெற்று விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

விவரம் கடைசி நாள் 

மாணவர்கள் விண்ணப்பிக்க 30.09.2025

கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தைச் சரிபார்க்க 15.10.2025

புதுப்பித்தல் (Renewal):

இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ([https://scholarship.gov.in](https://scholarship.gov.in)) உள்ள Renewal Application என்ற இணைப்பில் சென்று OTR Number பதிவு செய்து 2025-2026 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிய முதன்மைக் கல்வி அலுவலர்களையும், திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு National Scholarship Portal இணையதளத்தினையும் பார்வையிட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks