தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: ஒரு சவரன் ரூ.85,000-ஐ தாண்டியது! 1 Sovaran Gold Price Rs 85,000 Today

சவரனுக்கு ஒரே நாளில் ரூ.720 உயர்வு; கடந்த சில வாரங்களில் அதிர்ச்சிகரமான விலை ஏற்றம்!

தங்கம் விலை இந்தியாவில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சவரன் ரூ.80,000-ஐ கடந்த நிலையில், இன்று (செப்டம்பர் 27, 2025) ஒரு சவரன் தங்கம் ரூ.85,000-ஐத் தாண்டி விற்பனை செய்யப்படுவது நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய விலை நிலவரம்:

இன்று (செப்டம்பர் 27, 2025) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,640-க்கு, சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடரும் விலை ஏற்றம்:

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே கடுமையான ஏற்றத்தைக் கண்டு வருகிறது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதன் விலை சரசரவென உயர்ந்து வருகிறது.

கடந்த செப்டம்பர் 06, 2025 அன்று 22 காரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.80,000-ஐத் தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களிலேயே ரூ.85,000-ஐயும் தாண்டித் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை கடுமையான ஏற்றத்தைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!