அக்., 31 வரை அறிக்கை தாக்கல் செய்யலாம் - மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவு!
சென்னை, செப்டம்பர் 26: வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், வருமான வரி தணிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக, வரித் தணிக்கைக்கு உட்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் தணிக்கை அறிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இந்நிலையில், இந்த அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை, அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், உரிய காலத்திற்குள் தணிக்கை அறிக்கைகளைத் தயாரிக்க முடியாத தொழில் நிறுவனங்களுக்கும், கணக்குத் தணிக்கையாளர்களுக்கும் இது பெரும் உதவியாக அமைந்துள்ளது.