ஐபிஎல் முன்னாள் வீரர், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்; இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வேன் என உறுதி!
மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) 37 ஆவது தலைவராக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
உலகின் முன்னணி விளையாட்டு நிர்வாகங்களில் ஒன்றான பிசிசிஐ-ன் தலைவராகச் செயல்பட்டு வந்த ரோஜர் பின்னி, 70 வயதைக் கடந்ததால் அப்பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். அவருக்குப் பதிலாக, புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஐபிஎல் அனுபவம்:
மிதுன் மன்ஹாஸ், தனது ஐபிஎல் (IPL) கிரிக்கெட் வாழ்க்கையில் டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளுக்காக விளையாடியுள்ளார். மேலும், அவர் டெல்லி அணியின் கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார்.
மிதுன் மன்ஹாஸ் உறுதி:
இந்தப் புதிய மற்றும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் பேசிய மிதுன் மன்ஹாஸ், உலகின் சிறந்த கிரிக்கெட் வாரியம் இது. மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வேன்" என்று உறுதி அளித்துள்ளார்.
அவருக்குக் கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.